Breaking News

இராணுவ தளபதியின் கடற்படை தலைமையகத்திற்கான உத்தியோகபூர்வ விஜயம்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

இலங்கை  இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ செவ்வாய்க்கிழமை (08) கடற்படை தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டதுடன் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பணஆகஒடவஉடனஉம் உத்தியோகபூர்வ சந்திப்பும் இடம்பெற்றது.


கடற்படை தலைமையகத்துக்கு வருகைதந்த இராணுவ தளபதிக்கு இலங்கை கடற்படையின் உயரிய மரியாதையுடன் கடற்படையின் வரவேற்பு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து கடற்படை தளபதி பிரதிப் பிரதானி உள்ளிட்ட கடற்படை முகாமைத்துவ சபையை இராணுவ தளபதிக்கு அறிமுகப்படுத்தினார் .


இராணுவ மரபுகளின் படி நடைபெற்ற இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் போது இரு தரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து இராணுவ தளபதி மற்றும் கடற்படை தளபதிக்கிடையில் சுமூகமான கருத்து பரிமாற்றம் நடைபெற்றது. தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதில் இலங்கை இராணுவம் கடற்படையின் முக்கிய பங்களிப்பு குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.


சகோதர படைகளுக்கிடையிலான பிணைப்பு கௌரவமான ஒற்றுமை மற்றும் சேவை ஒத்துழைப்பை வலுப்படுத்திக் இந்த உத்தியோகபூர்வ சந்திப்பை குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கிடையில் நினைவு பரிசுகளும் பரிமாற்றம் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.











No comments