அநுராதபுரம் மாவட்டத்தில் கடற்படையினரினால் நிறுவப்பட்ட மூன்று நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பொது மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
இலங்கை கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ் அனுராதபுரம் மாவட்டத்தில் நிறுவப்பட்ட மூன்று மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பொது மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு சனிக்கிழமை (05) இடம்பெற்றது.
அநுராதபுரம் மாவட்டத்தின் கலேபிடுனுவெவ பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள துட்டுவெவ கட்டாரம்புர பாடசாலை மற்றும் உல்பத்துவெவ ஆரண்ய சேணாசனம் மற்றும் ஹொரவபொத்தானை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஜாமியுல் மில்பார் ஜூம்ஆ பள்ளிவாசல் ஆகிய மூன்று இடங்களில் கடற்படயினரின் தொழில்நுட்ப பங்களிப்புடன் ஜனாதிபதி செயலகத்தின் நிதி உதவியுடன் மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டு பொது மக்களிடம் கையளிக்கப்பட்டது.
இதுவரை இலங்கை கடற்படையினரால் நாடு பூராவும் 1112 மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும் ஒவ்வொன்றும் ஒரு நாளைக்கு சுமார் 10 ஆயிரம் லிட்டர் தண்ணீரை சுத்திகரிக்கும் திறன் கொண்டது. இதன் மூலம் ஏராளமான பொது மக்களின் சுத்தமான குடிநீர் தேவையினை எளிதில் பூர்த்தி செய்ய கூடியதாக இருக்கும் எனவும் கடற்படையினர் தெரிவிக்கின்றனர்
நோயற்ற வாழ்வு ஆரோக்கியமான மக்கள் என்ற அரச சுகாதார தொலை நோக்கு பார்வைக்கு ஏற்ப இலங்கை கடற்படை இந்த கடற்படை சமூகப் பணி திட்டத்தை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments