இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத உபகரணங்கள் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 31 பேர் 10 நாட்களில் கைது
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
இலங்கை கடற்படை கடந்த 10 நாட்களில் (2025 ஜூன் 20 முதல் ஜூன் 30 வரை) கடற்பரப்பில் மேற்கொண்ட தேடடுதல் நடவடிக்கைகளில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மற்றும் நுட்பங்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 06 டிங்கி படகுகளையும் 31 மீனவர்களையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
அதன்படி கிழக்கு கடற்படை கட்டளையின் திருகோணமலையின் சல்லிகோவில், சல்லிதீவு போல்டர் பொயின்ட் மற்றும் மலைமுண்டல் ஆகிய கடற்கரை மற்றும் கடல் பகுதிகளை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் விளைவாக தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் பயன்பாடுத்தியமை, மின்சார விளக்குகளை பயன்படுத்தியமை இரவில் சட்ட விரோதமாக சுழியோடி கடலட்டைகளை பிடித்தமைக்காகவும் 31 சந்தேக நபர்கள் 06 டிங்கி படங்கள் மற்றும் 11 தடைசெய்யப்பட்ட வலைகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்
மேலும், இந்த நடவடிக்கைகளின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட சந்தேக நபர்கள், தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள், மீன்பிடி படகுகள்,மீன்கள், கடலட்டைகள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை, மாங்கேணி மற்றும் ஈச்சிலம்பத்து மீன்பிடி மற்றும் நீர்வளத் துறை அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும், சல்லிகோவில் பகுதியில் கடற்படையால் கைப்பற்றப்பட்ட சந்தேக நபர்கள் டிங்கி படகுகள் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் , மீன்கள் டிபொருட்கள் மேலதிக உப்புவேலி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments