Breaking News

இஸ்லாமிய அணுகுண்டுகளை தடுப்பதில் வெற்றிகொண்ட இஸ்ரேலும், ஈரானில் சிக்கிக்கொண்ட மேற்குலகும்.

இஸ்லாமிய நாடுகள் அணு குண்டுகளை தயாரித்துவிடக் கூடாது என்பதில் இஸ்ரேல் மிகவும் அவதானமாக இருந்துவருவதுடன், அவ்வாறு முயற்சி செய்கின்ற நாடுகளின் அணு உலைகளை தாக்கி அழித்துள்ளது. 


அந்தவகையில், சதாம் ஹுசைனின் ஆட்சியில் ஈராக்கின் ஒசிராக் அணு மையம் 1981.06.07 இல் இஸ்ரேலினால் தாக்கி அழிக்கப்பட்டது. இதற்காக F-16, F-15 ரக விமானங்கள் பயன்படுத்தப்பட்டது. 


பசர் அல்-அசாத்தின் ஆட்சியில் வடகொரியாவின் உதவியுடன் கட்டப்பட்டுவந்த சிரியாவின் கிபார் அணு மையம் 2007.09.06 இல் இஸ்ரேலினால் தாக்கி அழிக்கப்பட்டது. 


லிபியாவில் பாகிஸ்தானின் Dr. A.Q. Khan யின் உதவியுடன் அணு ஆயுத திட்டம் செயற்படுத்தப்பட்டு வந்தது. ஈராக் மீதான அமெரிக்க படையெடுப்பின் காரணமாக லிபிய தலைவர் கடாபி அவர்கள் தானே முன்வந்து அணு ஆயுத திட்டத்தினை நிறுத்தினார். 


1991 இல் சோவியத் யூனியன் 15 நாடுகளாக பிரிந்தபோது அதில் உருவான இஸ்லாமிய நாடுகள் பலவற்றின் கைகளுக்கு அணு குண்டுகள் சென்றது. இதனை அமெரிக்காவும், இஸ்ரேலும் சற்றும் எதிர்பார்க்கவில்லை. 


1998 இல் பாகிஸ்தானின் அணு ஆயுத சோதனையை இஸ்ரேலினால் தடுத்து நிறுத்த முடியவில்லை. பாகிஸ்தான் மிக ரகசியமாக தனது அணு திட்டத்தை பேணியதுதான் இதற்கு காரணம் என்று கூறப்படுவது தவறானது.  


அப்போது பாகிஸ்தான் அமெரிக்காவின் மிக நெருங்கிய நட்பு நாடாக இருந்ததனால் இஸ்ரேலினால் அமெரிக்காவினை மீறி எதுவும் செய்ய முடியவில்லை என்றும், இதனை தடுக்க அமெரிக்கா முடிவெடுக்கவில்லை என்றும் கூறப்பட்டது.


பாகிஸ்தானின் அணு ஆயுத சோதனையை தடுப்பதற்கு இஸ்ரேலிலிருந்து அதிக தூரத்தில் இருப்பதன் காரணமாக பாகிஸ்தானின் அருகில் உள்ள நாடொன்றின் ஒத்துளைப்பின்றி தடுக்க முடியவில்லை.  


பாகிஸ்தானின் அண்டைய நாடுகள் இஸ்ரேலுடன் முரண்பாடுகளையும், பாகிஸ்தானுடன் நட்பினையும் கொண்டவயாக இருந்தன. இதனால் இந்தியாவின் உதவியினை இஸ்ரேல் நாடியதாகவும் அதற்கு இந்தியாவின் அன்றைய மிதவாத தலைமைகள் உடன்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.  


இவ்வாறான நிலையில் ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை தடுக்கும் முயற்சியில் இஸ்ரேலும், அமெரிக்காவும் முட்டி மோதி சிக்கிக்கொண்டு தோல்வியடைந்த நிலையில் உள்ளன. இதனால் அணு குண்டு தயாரிப்பதில் ஈரான் வெற்றியடையும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. 


முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




No comments