Breaking News

குருணாகல் கொழும்பு வீதியிலுள்ள வத்துராகல பகுதியில் தீ விபத்து

 (உடப்பு க.மகாதேவன்)

குருணாகல் கொழும்பு வீதியிலுள்ள வதுராகல பகுதியில் இன்று (03) வியாழக்கிழமை பாரிய தீ விபத்தொன்று ஏற்பட்டதாக குருணாகல் பொலிஸார் தெரிவித்தனர்.


இதில் ஒரு கட்டடத் தொகுதியில் பாரிய தீ விபத்து ஏற்பட்டு பலத்த சேதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. தீயைக் கட்டுப்படுத்த குருணாகல் தீயணைப்புப் படையினர்  செயற்பட்டுள்ளனர். 


மேலதிக விசாரணைகளை குருணாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








No comments