Breaking News

பூனைப்பிட்டி சாந்த லுசியா ஆலயத்தில் வெள்ளி விழா

 (உடப்பு - க.மகாதேவன்)

பூனைப்பிட்டி சாந்த லுசியா ஆலயத்தில்  மரியாயின்  சேனை   ஆரம்பிக்கப்பட்டு  25  வருடங்கள்  பூர்த்தியானதையொட்டி  வெள்ளிவிழா  கடந்த 28ந் திகதி  கொண்டாடப்பட்டது. 


மரியாயின்  சேனை (Legion of Mary) என்பது  கத்தோலிக்க திருச்சபையில் செயல்படும் ஒரு  அமைப்பாகும்.  இது அயர்லாந்து  நாட்டின்  டப்ளின் நகரில்  ஃபிராங்  டாஃப் என்பவரால்  1921-ம்  ஆண்டு செப்டம்பர்  7-ம்  திகதி தொடங்கப்பட்டது. அதே  போல்  இம்  மரியாயின் சேனை  இலங்கையில், 1936-ம்  ஆண்டு தொடங்கப்பட்டது.


மரியன்னையின்  பெயரால் தொடங்கப்பட்ட  இந்த அமைப்பு,  விசுவாசிகளை புனிதப்படுத்துவதையும், இறைவனுக்கு  மகிமை சேர்ப்பதையும்  நோக்கமாகக் கொண்டுள்ளது. 


இதன் போது,அருட்தந்தை ஜோசப் ஜேசுஸ்,ரோய், அமல்ராஜ், அருட் சகோதரிகள் அமிர்தா,தனு ஆகியோர்கலந்து கொண்டார்கள்.



















No comments