Breaking News

புத்தளம் புழுதிவயல் அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தில் இடம்பெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கு.

எம்.யூ.எம்  சனூன்

புத்தளம் பாலாவி புழுதிவயல் அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தில் விழிப்புணர்வு கருத்தரங்கொன்று ஞாயிற்றுக்கிழமை (14) பாடசாலையின் அதிபர் எம். ஏ. எல்.எம். ரிபாய்தீன் தலைமையில் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. 


இக்கருத்தரங்கின் காலை அமர்வில் "மாணவர்கள் மறக்காமல் எவ்வாறு கற்றுக்கொள்வது" எனும் தலைப்பில் மாணவர்களுக்கும்,  மாலை அமர்வில் "பிள்ளைகளுக்கு எவ்வாறு கல்வி கற்றுக் கொடுப்பது" எனும் தலைப்பில் பெற்றோர்களுக்கும் என இரு பிரிவுகளாக இடம்பெற்றது.


குறித்த வழிகாட்டல் கருத்தரங்கை பிரபல உளவள ஆலோசகர் அஷ்ஷெய்க் ஆதில் ஹஸன் வளவாளராக கலந்து கொண்டு நடாத்தினார். 


இதன்போது அதிகமான மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டு பயன் பெற்றமை குறிப்பிடத்தக்கது.












No comments