கற்பிட்டியில் இடம்பெற்ற மின்னொளி கரப்பந்தாட்ட போட்டியில் கற்பிட்டி பவர் சேர்ஜ் அணி சாம்பியன் கிண்ணத்தை சுவிகரித்தது.
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கற்பிட்டி யங் பிளயர்ஸ் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மின்னொளி கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி கற்பிட்டி மண்டலக்குடா பவர் சேர்ஜ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
கடந்த இரண்டு நாட்களாக மின்னொளியில் இடம்பெற்று வந்த விலகல் முறையிலான கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் 10 அணிகள் கலந்து கொண்டது.
இதில் முதல் நான்கு இடங்களை பெற்ற சம்மாட்டிவாடி கரப்பந்தாட்ட அணி, கண்டக்குழி லைமாஸ் அணி, கற்பிட்டி பவர் சேர்ஜ் அணி மற்றும் கற்பிட்டி யங் பிளயர்ஸ் அணி என்பன அரையிறுதிக்கு தகுதி பெற்றன இதில் முதல் அரையிறுதியில் கற்பிட்டி யங் பிளயர்ஸ் அணியை 2 - 0 கற்பிட்டி பவர் சேர்ஜ் அணி வெற்றி பெற்று முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இரண்டாவது அரையிறுதியில் சம்மாட்டிவாடி அணியினரை 2 - 1 என்ற கணக்கில் கண்டக்குழி லைமாஸ் அணி வெற்றி பெற்று இரண்டாவது அணியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
மிகவும் பலம் பொருந்திய கற்பிட்டி பவர் சேர்ஜ் அணியும் கண்டக்குழி லைமாஸ் அணியும் மிகவும் பரபரப்பாகவும் உற்சாகத்துடனும் கடும் போட்டியாகும் காணப்பட்ட இறுதிப் போட்டியில் கண்டக்குழி லைமாஸ் அணியை 2 - 1 என்ற கணக்கில் கற்பிட்டி பவர் சேர்ஜ் அணி வெற்றி கொண்டு செம்பியன் கிண்ணத்தை சுவிகரித்து கொண்டது.
No comments