Breaking News

கற்பிட்டி பிரதேச வீதி லாம்புகள் திருத்தும் பணியை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்த தவிசாளர்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி பிரதேசத்தில் நீண்ட நாட்களாக பழுதடைந்து திருத்தப்படாமல் காணப்பட்ட வீதி லாம்புகளை திருத்தியமைக்கும் பணியினை புதிய தவிசாளர் ஏ.எஸ்.எம் றிகாஸ் தலைமையில் திங்கட்கிழமை (30) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது


கற்பிட்டி ரஹ்மானிய்யா மதுரஸாவிற்கு முன்னாள் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந் நிகழ்வில் கற்பிட்டி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எஸ்.எம் றிகாஸ் உப தவிசாளர் எச்.சமன் குமார ஹேரத்,  உறுப்பினர் ஏ.ஆர்.எம் முஸம்மில் மற்றும் மௌலவி றிப்கான் (றஹ்மானி) என பலரும் கலந்து கொண்டனர்.


மேற்படி கற்பிட்டி பிரதேசத்தில் உள்ள சகல கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் முதற்கட்டமாக ஒரு கிராம உத்தியோகத்தர் பிரிவிற்கு 50 வீதி லாம்புகள் வீதம் திருத்தும் பணி இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






No comments