Breaking News

அட்டாளைச்சேனையில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் அம்பாறை மாவட்ட உறுப்பினர்களின் ஒன்றுகூடல்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்று கூடல் நிகழ்வு அட்டாளைச்சேனை சாரா பீச் ரெஸ்டோரண்டில் நடைபெற்றது.


ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் இரண்டு முறை வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூஷணம் என். எம். அமீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், தேசிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் அரசியல் பேரவை உறுப்பினரும் கரையோர பிரதேசங்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவா மற்றும் தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் அக்கரைப்பற்று மாநகர சபையின் முதல்வருமான ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் ஆகியோர் கௌரவ அதிதிகளாகக் கலந்து கொண்டனர். 


அட்டாளச்சேனை பிரதேச செயலாளர் எம்.ஏ. அஹமத் அக்பர், லேக் ஹவுஸ் நிறுவனத்தின் ஆசிரியர் பீடப் பணிப்பாளர் சிசிர யாப்பா, அக்கரைப்பற்று பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.என்.பி. தந்தநாராயண, இலங்கை ரூபவாஹினிக் கூட்டத்தாபனத்தின் தமிழ்ச் சேவை மற்றும் தமிழ் செய்திப் பிரிவின் முன்னாள் பதில் பணிப்பாளர் சிரேஷ்ட ஒலிபரப்பாளர் யூ.எல். யாகூப் ஆகியோர் நிகழ்வில் விசேட அதிதிகளாகவும் அக்கரைப்பற்று ஐ.பி. எச்.எஸ் கெம்பஸ் நிறுவனத்தின் ஸ்தாபகரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான பொறியியலாளர் ஹமீட் அலி, மக்கள் வங்கியின் மருதமுனைக் கிளையின் உதவி முகாமையாளர் எம்.ஐ.எம்.நபீல், அமானா வங்கி தலைமைக் காரியாலயத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, அக்கரைப்பற்றுக் கிளையின் முகாமையாளர் ஏ.எம். நபீல், குளோபல் விஷன் ஈஸ்டன் ப்ரோன்ஸியல் மற்றும் சொகோமோ இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் பணிப்பாளர் தேசமானிய ஜே.றியாஸ்,  பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.எம். தாஹிர் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தி சட்டத்தரணி ஏ. ஜே. ஹாரிஸ், கல்முனை அஸ்மா ஜுவலர்ஸ் முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.ஆர்.றிஸ்வான், கல்முனை டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலை நலன்புரி முகாமையாளர் எஸ்.எம்.அஜ்வத், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் பொருளாளரும் சிரேஷ்ட ஒலி/ஒளிபரப்பாளரும் கல்விமானுமாகிய மர்ஹும் ஏ.ஆர்.எம். ஜிப்ரி அவர்களது ஞாபகார்த்தமாக நிகழ்வுக்கு அனுசரணையாளர்களில் ஒருவரான அன்னாரது சகோதரன் அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம். நௌபீல், 

பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் அவர்களது பிரதிநிதியாக அவரது ஊடகச் செயலாளர் அஸ்லம் எஸ். மௌலானா ஆகியோர் நிகழ்வில் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.


மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயற்குழு உறுப்பினர்கள், ஆலோசகர்கள், அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்ட இணைப்பாளர்கள், காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர், அம்பாறை மாவட்டத்திலுள்ள அனைத்து ஊடக அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் சகல உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள் அனைவருக்கும் போரத்தின் 30 வருட பூர்த்திய முன்னிட்டு, பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.


இதன்போது அக்கரைப்பற்று ஐ.பி. எச்.எஸ் கெம்பஸ் நிறுவனம் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்துடன் இணைந்து அம்பாறை மாவட்ட ஒன்று கூடல் நிகழ்வில் கலந்து கொள்ளும் உறுப்பினர்களுக்காக வழங்கப்பட்ட பேக் உத்தியோகபூர்வமாக போரத்தின் தலைவர் என்.எம். அமீன் ஐ.பி.எச்.எஸ் கெம்பஸின் ஸ்தாபகரும் நிறைவேற்று அதிகாரியுமான பொறியியலாளர் ஹமீட் அலி, போரத்தின் தலைவர் என்.எம். அமீனுக்கு கையளித்தார்.


இந்த பேக்குகள் நிகழ்வில் இரண்டாவது அமர்வின் போது உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டதுடன் கலை நிகழ்வுகளும் மேடையை அலங்கரித்தும் குறிப்பிடத்தக்கது. 


இதன் போது  ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவராக இருந்து  அரும்பணியாற்றிய சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூஷணம் என்.எம்.அமீனுக்கு போரத்தின் முன்னாள் செயற்குழு உறுப்பினரும் ஊடக ஒருங்கிணைப்பாளரும் பல்துறைக் கலைஞரும் துணிந்தெழு சஞ்சிகையின் பிரதம ஆசிரியருமான ஊடகவியலாளர் எம்.எஸ்.எம். ஸாகிர்  பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.


நிகழ்வு இராப்போசனத்துடன் இனிதே நிறைவு பெற்றது.












No comments