இலங்கை கல்வி நிர்வாக சேவை(SLEAS) மற்றும் இலங்கை திட்டமிடல் சேவை(SLPS) ஆகிய இரு சேவைக்கும் எம்.எம்.எம். சிராஜ் தெரிவு.
எம்.யூ.எம்.சனூன்
நாடளாவிய நிறைவேற்றுத் தர சேவைகளான இலங்கை கல்வி நிர்வாக சேவை(SLEAS) மற்றும் இலங்கை திட்டமிடல் சேவை(SLPS) ஆகிய இரு சேவைக்கும் தெரிவான எம்.எம்.எம். சிராஜ், தனது தெரிவின் அடிப்படையில் ஜுலை 01 ம் திகதி இலங்கை திட்டமிடல் சேவையில் தனது நியமனத்தை பெற தயாராக உள்ளார்.
மதவாச்சியை பிறப்பிடமாகக் கொண்ட இவர் தனது ஆரம்பக் கல்வி தொடக்கம் உயர்தரம் வரை மதவாச்சி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்றார். இவர் தனது பாடசாலை காலத்தில் கல்வியில் மாத்திரமல்லாது இணைப்பாடவிதான செயற்பாடுகள் மற்றும் வெளிக்கள செயற்பாடுகள் என்பவற்றிலும் தனது திறமை மற்றும் ஆளுமையை வெளிச்சமிட்டு காட்டியவராவார் .
தனது உயர்கல்வியை தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் பயின்றதுடன் முகாமைத்துவம், தகவல் தொழில் நுட்பவியலில் வகுப்பு சித்தியுடன் விஞ்ஞானமானி பட்டத்தையும் தனதாக்கி கொண்ட எம்.எம்.எம். சிராஜ், எந்தவித கல்வி பின்புலமும் இல்லாத சாதாரண குடும்பத்தில் பிறந்தவராவார்.
தனது பட்டப்படிப்பின் பின்னர் மதவாச்சி பிரதேச செயலாளர் காரியாலயத்தில் கிராம உத்தியோகத்தராக தனது பணியை ஆரம்பித்து சிறிது காலத்தில் தனது சொந்த தேவையின் நிமித்தம் சேவை மாற்றம் பெற்று ICT பாட ஆசிரியராக திகழி பாடசாலையில் ஆறு வருடங்களாக தனது பணியை தொடர்ந்து வருகிறார்.
பல அரச பொது போட்டி பரீட்சைகளில் தோற்றி எதிலும் தோல்வி காணாத இவருக்கு இலங்கையின் நிறைவேற்று சேவையின் இந்தப் போட்டி பரீட்சை பாடசாலை காலத்திலிருந்தே இலக்காக இருந்தது.
தான் இலங்கையின் நிறைவேற்றுத் தர சேவையின் உத்தியோகத்தராக வரவேண்டும் என்ற இலக்குடன் கல்வி பயின்றதுடன் தனது இலக்கை அடைவதில் வெற்றியும் கண்டுள்ளார்.
No comments