புத்தளம் விருதோடை குளத்தை புணரமைப்புக்காக பார்வையிட்ட பைசல் எம்.பி
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)
புத்தளம் விருதோடைக் குளம் மிக நீண்ட காலமாக கவனிப்பாறற்ற நிலையில் காணப்பட்டது மேற்படி விருதோடை குளத்தினை புணரமைப்பு செய்து அபிவிருத்தி செய்வற்காக புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம் பைசல் பார்வையிட்டார்.
இதன்போது முந்தல் பதில் பிரதேச செயலாளர் மற்றும் முந்தல் பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் ஊர் மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மேற்படி விருதோடை குளத்தினை முழுமையாக சுத்தம் செய்து நன்நீர் மீன் வளர்ப்பு என்பவற்றோடு குளத்து நீரினை பயன்படுத்தி விவசாயத்தினை விரிவுபடுத்துதல் அத்தோடு குளப்பாதையை அகழப்படுத்தி செப்பனிடல் மேலும் குளத்தை சூழ வடிகான் அமைத்து மழை காலங்களில் வெள்ள நீரினை வழிந்து ஓட வைத்தல் மற்றும் குளத்தை சுற்றி நடைபாதை அமைத்தல் போன்ற வேலை திட்டங்கள் குளத்தை மையமாக வைத்து ஆரம்பிப்பதற்கான கலந்துரையாடலையும் புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம் பைசல் அதிகாரிகளுடன் மேற்க்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
Post Comment
No comments