JobVibe.lk - Sri Lanka Job Portal

உடப்பு - ஆண்டிமுனை பாலர் பாடசாலையில் இடம்பெற்ற சித்திரை புத்தாண்டு நிகழ்வு

 (உடப்பு - க.மகாதேவன்)

புத்தளம் மாவட்டம் முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட உடப்பு ஆண்டிமுனைப் பகுதியில் உள்ள ஆதவன் பாலர் பாடசாலையின் சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகள் (13) வெள்ளிக்கிழமை மாலை அதன் ஆசிரியைகள் க.கிருஷ்ணகாந்தி, சி.ஜனனி ஆகியோரின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.


இதன் போது, ஆதவன் பாலர் பாடசாலை சங்கத்தின் தலைவர் திரு.கணேஷ்குமார் முக்கிய அதிதியாக கலந்து கொண்டார். மாணவர்களின் நிகழ்வுகளில் பலூன் ஊதுதல், சாக்கோட்டம், முட்டி உடைத்தல், பெற்றோரின் சங்கீதக் கதிரை போன்றவையும் இடம்பெற்றது. இறுதியில் மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
















Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال