JobVibe.lk - Sri Lanka Job Portal

எங்க ஒருவரையும் கானல்ல ? வெக்கப்படாம வாங்களேன்...... 57 முஸ்லிம் நாடுகளில் ஈரானை மாத்திரம் ஏன் இஸ்ரேல் தாக்குகிறது ?

“”ஈரான் ஒருபோதும் இஸ்ரேலை தாக்காது, ஈரானுக்கும் யூதர்களுக்கும் இடையில் புரிந்துணர்வு உள்ளது, இவர்கள் இருவரும் ஒன்றுதான், யூதர்களைவிட மிகவும் மோசமானவர்கள் சியா காபீர்கள், இஸ்ரேலை நம்பினாலும் ஈரானை நம்பக்கூடாது, ஈரான் சியாக்கள் இஸ்லாத்தை அழிக்க வந்தவர்கள்””


மேலே உள்ள வசனங்கள் எல்லாம், கடந்த காலங்களில் மத்தியகிழக்கு மற்றும் பாலஸ்தீன் விவகாரம் பற்றியும், அதில் ஈரானுக்கு சார்பாகவும் எழுதியபோது எனது கட்டுரைகளுக்கு பதிவிடப்பட்ட பின்னூட்டங்கள். 


போதாததற்கு இன்னுமொருபடி மேலே சென்று எனக்கும் சியா முத்திரை குத்தினார்கள்.  


தற்போது ஈரான் இஸ்ரேலுக்கு எதிராக தாக்குகின்றது. ஆனால் இஸ்ரேலும், ஈரானும் ஒன்று என்று கருத்து பகிர்ந்த அந்த அதி மேதாவிகளை மாத்திரம் சமூகவலைத் தளங்களில் காணவில்லை. 


உங்களது கருத்துக்கள் மூலம் அரசியலில் உங்களது அறிவு, மூளை எந்த நிலையில் உள்ளது என்பது பற்றி எனக்கு நன்றாக புரிந்தது. ஆனாலும் அதனை நான் காட்டிக்கொள்ளவில்லை. 


பருவாயில்லை, கோபிக்க மாட்டேன் வாங்க. வந்து தற்போது 57 முஸ்லிம் நாடுகளில் ஈரானை மட்டும் ஏன் இஸ்ரேல் தாக்குகிறது ? ஈரான் ஏன் பதிலுக்கு இஸ்ரேலை தாக்குகின்றது என்பதற்கு விளக்கம் தாருங்கள். 


இந்த போர் முடியும் வரைக்கும் கொஞ்ச நாளைக்கு அமைதியாக இருந்துவிட்டு, சில காலம் சென்றதன் பின்பு மீண்டும் வந்து அவர்கள் சியாக் காபீர்கள் என்பார்கள். 


நீங்கள் கூறுகின்ற அந்த சீயாக்களினால்தான் இன்று ஒட்டுமொத்த உலக முஸ்லிம்களின் கௌரவமும் காப்பாற்றப்படுகின்றது என்பதனை மறந்துவிட வேண்டாம். 


முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال