பாலாவி கற்பிட்டி வீதியில் விபத்து குடும்ப பெண் பலி
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
பாலாவி கற்பிட்டி வீதியில் வைத்து எரிபொருள் பவுசர் மோதி குடும்ப பெண் ஒருவர் பலியான சம்பவம் வெள்ளிக்கிழமை (20) இரவு இடம்பெற்றுள்ளது.
இது பற்றி தெரியவருவதாவது கற்பிட்டி நோக்கி சென்று கொண்டிருந்த எரிபொருள் பவுசர் அதே வீதியில் நடந்த சென்று கொண்டிருந்த குடும்ப பெண் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே குடும்ப பெண் உடல் நசுங்கி பலியாகியதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
மரணமடைந்தவர் பாலாவியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயான அபூதாலிப் பாத்திமா றிசானா என்பவர் தற்போது சடலம் புத்தளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து பற்றிய மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments