Breaking News

ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபை தலைவர் தெரிவில் அமளிதுமளி, எதிர்கட்சியினர் வெளிநடப்பு!. தலைவர் தெரிவு ஒத்தி வைப்பு!.

உடப்பு-க.மகாதேவன்

புத்தளம் மாவட்டம் ஆராச்சிகட்டுவ பிரதேச சபையின் பதவியேற்பு நிகழ்வு இன்றைய தினம் நடைபெற ஏற்பாடாகியிருந்த போதும் இன்றைய தினம் (20) நடைபெற்ற அமளிதுமளி காரணமாக அது பிரிதொரு நாளுக்கு தள்ளி போடப்பட்டுள்ளது.


இன்றைய தினம் ஆராச்சிகட்டுவ பிரதேச சபையை அமைப்பதற்கான கூட்டம் நடைபெற்றது.  இதில் கடந்த பிரதேசசபை தேர்தலில் வெற்றியீட்டிய உருப்பினர்கள் வருகைதந்திருந்ததுடன் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை பலம் எதிர்கட்சிகளின் வசம் இருப்பதாகவும் ஆனாலும் தேசிய மக்கள் சக்தி (என் பி பி ) உறுப்பினர்கள் ரகசிய வாக்கெடுப்பை கோறுவதாகவும் குற்றம் சாட்டிய எதிர்கட்சியினர் சபையை விட்டு வெளிநடப்பு செய்தனர் 


22 ஆசனங்களைக் கொண்ட மேற்படி ஆராச்சிகட்டுவ பிரதேச சபையில் ஆளும் என் பி பி கட்சி சார்பாக போனஸ் ஆசனத்துடன் 10  ஆசனங்களும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போனஸ் ஆசனங்களுடன் 6 ஆசனங்களும் ,ஶ்ரீலங்கா பொதுஜனபெரமுன கட்சி 2 ஆசனங்களும்,மக்கள் முன்னனி 2 ஆசனமும்,ஐக்கிய தேசியக் கட்சி 1ஆசனமும்,சுயேட்சைக்குழு 1 ஆசனமும் பெற்றிருந்தனர்.


இந்த நிலையில் இன்றைய தினம் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து 12 பேர் பெரும்பான்மை இருப்பதாக கைதூக்கி ஆட்சி அமைக்க அனுமதி கோறப்பட்ட நிலையில் ரகசிய வாக்கெடுப்பிற்கு என் பி பி உறுப்பினர்கள் சபையில் கோரிக்கை வைத்ததாகவும் இதனால் சபையில் இருந்து வெளிநடப்பு செய்ததாகவும் கூறப்படுகிறது.


இதன் போது ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உருப்பினர் ஹெக்டர் ஹப்புஹாமி உள்ளிட்ட பல அரசியல் கட்சி முக்கியஸ்த்தர்கள் பலரும் அவ்விடத்தில் இருந்தமை குறிப்பிடத் தக்கது.


மேலும் ஆராச்சிகட்டு பிரதேச சபையின் ஆட்சி அமைப்பது குறித்து முடிவின்றி போயுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.






No comments