Breaking News

கற்பிட்டி வாகன சர்விஸ் நிலையத்தில் வேன் மோதி ஒருவர் பலி

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி வன்னிமுந்தல் பகுதியில் உள்ள வாகனங்கள் சர்விஸ் நிலையத்தி சர்விஸ் பண்ணுவதற்கு வந்த வேன் சாரதியின் கவனக்குறைவின் காரணமாக சர்விஸ் ஊழியர் ஒருவர் வேன் மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் திங்கட்கிழமை (30) பிற்பகல் இடம்பெற்றுள்ளது 


உயிரிழந்தவர் 35 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையாவார். உயிழந்தவரின் சடலம் மேலதிக பரிசோதனைக்காக புத்தளம் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது டன் வேன் சாரதி கற்பிட்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 


சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




No comments