அஹதியா இடைநிலை பரீட்சையில் ஹிதாயத் நகர் அஹதியா பாடசாலை சிறந்த பெறுபேறு.
எம்.யூ.எம்.சனூன்
2024 அஹதியா பாடசாலைகளின் மத்திய சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட அஹதியா இடைநிலை சான்றிதழ் பரீட்சையில் ஹிதாயத் நகர் அல் இஸ்ஸோ அஹதிய்யா பாடசாலை மாணவர்கள் 100 வீதம் சித்தியடைந்துள்ளதுடன் பரீட்சைக்கு தோற்றிய 26 மாணவர்களில் 15 மாணவர்கள் சகல பாடங்களிலும் ஏ சித்தியை பெற்றுள்ளதாக அஹதியா பாடசாலையின் அதிபர் எச்.எம்.எப். ஹிமாயா தெரிவித்தார்.
அதனடிப்படையில் ஏ.எப். அமீரா, ஜே.எப்.மிப்லா, ஜே.எப். பாஸிஹா, ஜே.ஜெசீரா, எம்.ஏ.எப்.அம்ரா, எம்.ஏ.எப். றிப்கா, எம்.எச்.எப். ஆதிகா, எம்.எம். அஸ்கியா, எம்.ஆர்.எப். ரிதா, எம்.எஸ்.எப். அப்லா, எம்.எஸ்.எப்.சபி, எஸ்.எப்.முஆதா, என்.எச்.எம். ஹானித், எஸ்.சாஹித், டீ. ஆதில் ஹசன் ஆகியோர் 3ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.
சிறந்த பெறுபேற்றைப் பெற்றுக் கொள்வதற்கு உழைத்த அஹதியா பாடசாலையின் தலைவர் அஷ்ஷெய்க் சாகிர் (ஹாமி) , மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்திய பாட ஆசிரியர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக அதிபர் மேலும் தெரிவித்தார்.
No comments