Breaking News

கற்பிட்டியில் இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு தொடர்பான கலந்துரையாடல்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டியில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கற்பிட்டி பிரதேச சபையின் செயலாளர் மங்கள ராமநாயக்க தலைமையில் வியாழக்கிழமை (29) கற்பிட்டி பிரதேச சபையின் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.


இதில் கற்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி, பொதுச் சுகாதார பரிசோதகர், கற்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகள், கற்பிட்டி விஜயா கடற்படை பிரிவின் தளபதிகள், கற்பிட்டி கோட்டக் கல்வி பணிமனையின் அதிகாரிகள், கற்பிட்டி தள வைத்தியசாலை அதிகாரிகள், கற்பிட்டி பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


இதில் கற்பிட்டி பிரதேசத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்கள் தொடர்பாகவும் பிரதேச மக்கள் தமது சுற்றுப்புற சூழலை சுத்தமாக வைப்பதற்கு மக்களுக்கான தெளிவூட்டல்களையும் அறிவுறுத்தல்களையும் எவ்வாறான முறைகளில் வழங்குவது மற்றும் பாடசாலை மட்டத்தில் எவ்வாறான விழிப்பூட்டல்களை மேற் கொள்வது தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் அதற்கான செயல்திட்டங்களும் அமைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.






No comments