“கிளீன் ஶ்ரீலங்கா” வேலைத் திட்டம் - ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபரினால் கௌரவிப்பு!.
உடப்பு - க.மகாதேவன்
“கிளீன் ஶ்ரீலங்கா” வேலைத் திட்டத்தின் கீழ் ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயத்தின் வகுப்பறைக் கட்டிடங்களுக்கான மின்சார இணைப்பை புனரமைத்து வசதிகளை ஏற்படுத்தும் செயற்றிட்டம் தம்பண்ணி கடற்படை அணியினரால் (29) வெற்றிகரமாக அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கான பெற்றோரின் ஒத்துழைப்பும் இதில் பாராட்டக்கூடிய விடயமாக காணப்பட்டது.
கடற்படை அணியினருக்கு ,பாடசாலையின் சார்பில் நினைவுப் பரிசை அதிபர் திரு.ந. பத்மானந்தன் வழங்கி கௌரவித்தார்.
No comments