கற்பிட்டி உச்சமுனை காட்டில் கைவிடப்பட்ட நிலையில் துப்பாக்கி ஒன்று இரு தோட்டாக்களுடன் கண்டுபிடிப்பு
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கற்பிட்டி விஜய கடற்படையினரின் இரகசிய தகவலுக்கு அமைய கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.ஏ.ஆர் லக்ஸ்மன் றன்வல ஆராச்சி தலைமையில் பண்டார (101820) ஆகியோர் மேற்கொண்ட தேடுதலில் கற்பிட்டி உச்சமுனை தேவாலயத்திற்கு பின்னால் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் கட்டு துப்பாக்கி ஒன்றும் பாவிக்கப்படாத ஒரு தோட்டாவும் அத்தோடு வெற்று தோட்டா ஒன்றும் புதன்கிழமை (28) மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இத் துப்பாக்கி எந்த தேவைக்காக பயன்படுத்தப்பட்டது மனித கொலைக்காகவா அல்லது மிருக வேட்டைக்காகவா என்ற கோணங்களில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கற்பிட்டி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
No comments