Breaking News

கற்பிட்டியில் இடம்பெற்ற முஸ்லிம் திடீர் மரண விசாரணை தெளிவூட்டல் நிகழ்வு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

நாட்டில் இடம்பெறும் திடீர் மரணங்களை விசாரணை செய்வதற்கென நீதி அமைச்சினால் திடீர் மரண விசாரணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிலும் முஸ்லிம் மரணங்களின் போது 24 மணிநேரத்திற்குள் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில் முஸ்லிம் திடீர் மரண விசாரணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனினும் இது விடயமாக  பொது மக்களுக்கு தெளிவின்மை காணப்படுகின்ற காரணங்களால் மரண விசாரணையாளருக்கும் மக்களுக்கும் இடையில் பல சந்தர்ப்பங்களில் சிக்கல்கள் ஏற்படுகின்றது. இது தொடர்பாக மக்களுக்கு தெளிவூட்டும் நிகழ்வு ஒன்று கடந்த சனிக்கிழமை (17) கற்பிட்டி பஸார் ஜூம்ஆ பள்ளிவாசலில் கற்பிட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி எஸ்.எம் நாசீம் தலைமையில் இடம்பெற்றது.


இந் நிகழ்வில் தேசிய திடீர் மரண விசாரணை அமைப்பின் பிரதான இணைப்பாளரும் முன்னாள் செயலாளரும் குருநாகல் திடீர் மரண விசாரணை அதிகாரியுமான சட்டத்தரணி எம் பர்ஷான், கிண்ணிய்யா திடீர் மரண விசாரணை அதிகாரியும் உளவளத்துணையாளர் மௌலவி எம்.ஷாபி,வத்தளை திடீர். மரண விசாரணை அதிகாரி மௌலவி எம்.சஜீர், ஹம்பாந்தோட்டை திடீர் மரண விசாரணை அதிகாரி எம். மூசீன். மற்றும் நுரைச்சோலை திடீர் மரண விசாரணை அதிகாரி இல்ஹாம் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இலங்கையின் திடீர் மரண விசாரணை சம்மந்தமான சட்டதிட்டங்கள், முஸ்லிம் திடீர் மரண விசாரணையாளர்கள் நியமிக்கப்பட்டதன் நோக்கம், உடற்கூற்று செய்யப்பட வேண்டிய சந்தர்ப்பங்கள் மற்றும் திடீர் மரண விசாரணையினால் மக்களுக்கும், சுகாதார திணைக்களத்திற்கும், நாட்டிற்கும் கிடைக்கக் கூடிய நன்மைகள் சம்மந்தமாக தெளிவூட்டப்படல்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








No comments