JobVibe.lk - Sri Lanka Job Portal

கற்பிட்டி நகரில் பெய்த மழை காரணமாக பெரியகுடியிருப்பு, சின்னக்குடியிருப்பு வீதிகள் பாதிப்பு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டியில் சனி மற்றும் ஞாயிறு தினங்கள் பேய்த கடும் மழை காரணமாக பெரியகுடியிருப்பு, சின்னக்குடியிருப்பு  பகுதிகளின் சில வீதிகள் பாதிக்கப்பட்டுள்ளது. 


சின்னக்குடியிருப்பின் செட்டித் தெரு மற்றும் பறங்கியர் தெரு சந்தி என்பனவும் பெரியகுடியிருப்பின் மேட்டுத் தெரு மற்றும்  மரைக்கார் வீதி ஆகியவைகளில் மழை நீர் தேங்கி. கிடப்பதுடன் பாதசாரிகள் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.


இவ் வீதிகள் கொங்ரீட் போடப்பட்டுள்ள போதும் மழை நீர் வழிந்தோடுவதற்கான திட்டமிடல் வசதிகள் செய்யப்படாமையே சிறிய மழையின் போதும் நீர் நிரம்புவதாக மக்கள் தமது அதிர்ப்தியை வெளியிடுகின்றமையும் குறிப்பிடத்தக்கது..









Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال