Breaking News

முஷரப்பை முஸ்லிம் காங்கிரசில் இணைக்கலாமா ?

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஷர்ரபை முஸ்லிம் காங்கிரசில் இணைப்பதில் கட்சிப் போராளிகள் பலருக்கு அதிருப்தி காணப்படுகின்றது.  


அரசியல் வாழ்வு வழங்கிய தலைவர் றிசாத் பதியுதீனுக்கு துரோகம் செய்த ஒருவரால் எவ்வாறு எமது தலைவருக்கு விசுவாசமாக இருக்க முடியும் என்பது இவர்களது கேள்வியாகும். இது நியாயமான கேள்விதான். இதனை தவறு என்று கூற முடியாது.   


ஆனால் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். அதாவது அரசியலில் நம்பிக்கை துரோகம் என்பது சர்வ சாதாரனமானதாகும். ரவுப் ஹக்கீமால் வளர்க்கப்பட்டு அரசியல் உச்சத்தை அடைந்தபின்பு தலைவருக்கு நம்பிக்கை துரோகம் செய்தவர்கள் ஏராளம். இதனால் நம்பியவர்களிடம் ஏமாற்றம் அடைந்த நீண்ட அனுபவம் மு.கா தலைவருக்கு உண்டு. 


முஷர்ரப் ஒரு தனி மனிதன் என்றால் அவரை கண்டுகொள்ளாமல் விடலாம். ஆனால் கடந்த தேர்தலில் எந்தவித கட்சியின் தயவுமின்றி சுயேற்சயாக போட்டியிட்டு எட்டாயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகளை பெற்றுள்ளார். இது அவரது தனிப்பட்ட செல்வாக்கை குறிக்கின்றது. 


இந்த வாக்குகளில் பெரும்பாலானவை ஆரம்ப காலங்களில் முஸ்லிம் காங்கிரசுக்கு சொந்தமானவை. கடந்த 2020 பொது தேர்தலில் மூளைச்சலவை காரணமாக பொத்துவிலில் உள்ள மு.கா ஆதரவாளர்கள் முஷரப்பை ஆதரித்தனர். அந்த வாக்குகளை அதே முஷரப் மூலமாக மீண்டும் மு.கா பெற்றுக் கொள்வதில் தவரில்லை. 


மு.கா என்பது அனைத்து முஸ்லிம்களையும் அரசியல் ரீதியாக ஒற்றுமைப்படுத்தும் ஒரு பேரியக்கமாகும். இதில் யாரையும் இணைக்க கூடாதென்று தட்டிக்கழிக்க முடியாது. அன்று அதிகாரத்தில் இருந்துகொண்டு தலைவர் அஷ்ரப்புக்கு எதிராக யாரெல்லாம் செயற்பட்டு கடுமையாக விமர்சித்தார்களோ பின்னாட்களில் அவர்களையெல்லாம் அஷ்ரப் அவர்கள் முஸ்லிம் காங்கிரசில் இணைத்தார். 


2001, 2003, 2004 ஆகிய ஆண்டுகளில் ஆட்சியாளரின் பின்னணியுடன் ரவுப் ஹக்கீமை தலைவர் பதவியிலிருந்து அகற்றுவதற்கு எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் முறியடிக்கப்பட்டது. அதன் மூலம் துரோகத்தை முறியடிப்பதில் நீண்ட அனுபவம் மு.கா தலைவருக்கு உள்ளதுடன், கட்சியின் யாப்பும் தலைவருக்கு பாதுகாப்பாக உள்ள நிலையில் தலைமை பதவிக்கு சவால் விடுவதென்பது சாத்தியமற்ற ஒன்றாகும்.  


முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




No comments