Breaking News

கற்பிட்டி பெரியகுடியிருப்பின் கிராம அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

அரசின் கிராம அபிவிருத்தி வேலைத்திட்டத்தை  திட்டமிடுவது தொடர்பான கலந்துரையாடல் கற்பிட்டி பெரிய குடியிருப்பு  கிராம சேவகர் பிரிவில் அதன்  பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எஸ்.பீ சாமிலா  தலைமையில் வாழைத்தோட்டம் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. 


இந் நிகழ்வில் கற்பிட்டி  பிரதேச சபை உறுப்பினர் சமன் குமார, கிராம உத்தியோகத்தர் எம்.றியால், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் .எச்.எம் றிம்ஸான்,  விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர் றுவான்  மற்றும்  கிராமத்தின் தொண்டர் நிறுவனங்கள்,சமூக செயற்பாட்டாளர்கள், சமூகத் தலைவர்கள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.


இதன் போது கற்பிட்டி பெரியகுடியிருப்பு கிராமத்தில் எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு அதற்கான திட்டங்களும்  வரையப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.









No comments