உழ்ஹிய்யா தொடர்பாக புத்தளம் மாநகர சபை விடுக்கும் அறிவித்தல்.
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
எதிர்வரும் ஹஜ்ஜுப் பெருநாளுக்காக உழ்ஹிய்யா கடமையை நிறைவேற்ற ஆடு, மாடுகளை அறுப்பதற்கு எண்ணியுள்ளவர்கள் மாநகர சபையின் அனுமதியை பெற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.
03.06.2025 ம் திகதிக்கு முன்னதாக மாநகர சபைக்கு சமூகமளித்து அனுமதிகளை பெற்றுக்கொள்ளுமாறும், அனுமதியின்றி உழ்ஹிய்யா நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற போது ஏற்படுகின்ற சட்ட பிரச்சினைகளிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறும் பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் இறைச்சிக்கழிவுகளை பாதைகள், பொது இடங்களில் வீசுவதை முற்றாக தவிர்த்து புத்தளம் மாநகர சபையினால் கழிவுகளை போடுவதற்காக புத்தளம் நெடுங்குளம் மைதானத்துக்கு அருகிலும், மாநகர சபை திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்திலும் வெட்டப்பட்டுள்ள பிரத்தியேக குழிகளிலும், ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள ட்ராக்டர் வண்டிகளிலும் கழிவுகளை போடுமாறும் மாநகர சபையின் செயலாளர் மற்றும் பொது சுகாதார பரிசோதகர் ஆகியோர் இணைந்து வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
No comments