Breaking News

கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்களின் வர்த்தமானி வெளியானது - முன்னாள் தவிசாளர் மின்ஹாஜ் மற்றும் எதிர்கட்சி தலைவர் தாரீக் அவுட் -

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 32 உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி வெளியிடப்பட்டது. முன்னாள் தவிசாளர் மின்ஹாஜ் மற்றும் எதிர்கட்சி தலைவர் தாரீக் ஆகியோர்   இம்முறை கட்சி மாறி ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக தேர்தலில் போட்டியிட்ட போதும் அவர்கள் இருவரையும் மக்கள் நிராகரித்துள்ளனர். இந்நிலையில் போனஸ் ஆசனமும் வழங்கப்படவில்லை.


தேர்தல்கள் மூலம் 17 வட்டாரங்களில் இரண்டு இரட்டை பிரதிநிதித்துவ வட்டாரங்கள் உள்ளடங்களாக வெற்றி பெற்ற 19 உறுப்பினர்களும் பட்டியல் மூலம் போனஸ் ஆசனங்களாக 13 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர். இவர்களில் 19 சிறுபான்மை பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.18 முஸ்லிம்களும் ஒரு தமிழ் பெண் பிதிநிதியும் கற்பிட்டி பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


இதன்படி தேசிய மக்கள் சக்தி 08 வட்டாரங்களில் வெற்றி பெற்று இரு இரட்டை உறுப்பினர் வட்டாரங்கள் உள்ளடங்களாக( 16 709 வாக்குகள்)  10 உறுப்பினர்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 06 வட்டாரங்களில் வெற்றி பெற்று ( 18 114 வாக்குகள்) 04 போனஸ் உறுப்பினர்களுடன்l 10 உறுப்பினர்களையும் இலங்கை பொதுஜன பெரமுன ஒரு வட்டாரத்தில் வெற்றி பெற்று 02 போனஸ் உறுப்பினர்களுடன் (4 807 வாக்குகள்) 03 உறுப்பினர்களையும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இரண்டு வட்டாரங்களில் வெற்றி பெற்று ( 4 161 வாக்குகள்) 02 உறுப்பினர்களையும் பொதுஜன ஐக்கிய முன்னணி ( 2 527 வாக்குகள்) 02 போனஸ் உறுப்பினர்களையும் சர்வஜன அதிகாரம் ( 3 003 வாக்குகள்) 02 போனஸ் உறுப்பினர்களையும் ஐக்கிய தேசிய கட்சி ( 1 939 வாக்குகள்) 01 போனஸ் உறுப்பினரையும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ( 1 443 வாக்குகள்) 01 போனஸ் உறுப்பினரையும் சுயேட்சை குழு ( 2 011 வாக்குகள்) 01 போனஸ் உறுப்பினரையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.




No comments