Breaking News

புத்தளம் - உடப்பு கிராமத்தில் கடலரிப்பு! அதனை தடுக்க கல் போடும் பணி ஆரம்பம்.

 -உடப்பு க.மகாதேவன்-

 புத்தளம்மாவட்டம் - உடப்பு கிராமத்தில் கடந்த சில தினங்களாக தென்மேல் பருவக்காற்றின் வேகத்தால் கடலரிப்பு ஏற்பட்டுள்ளது. கடலின் கரை ஓரங்கள் பாரிய மண் குழிகளாகக் காணப்படுகின்றது. இதனால் மீனவர்களின் படகுகளை கடலில் இறக்குவது மிகவும் கஷ்டமான காரியம் எனவும் மீனவர்கள் தெரிவித்தனர்.



 அதேநேரம் கடலரிப்புக்கான கற்கள் போடும் பணியும் குறிப்பிட்ட பகுதிகளில்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. உடப்பு காளிகோவிலுக்கருகாமையிலுள்ள பாலத்திலிருந்து கருங்கல் போடும் பணிகள் இன்று (21) காலை தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடலோரப் பாதுகாப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.



பாலத்திலிருந்து வடக்குப் பக்கமாக 200மீற்றர் தூரம் வரையான இந்த கல் போடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதனால் ஓரளவு கடலரிப்பு தடுக்கப்படும் என நம்பப்படுகிறது.கடந்த காலங்களில் இந்தக் கடலரிப்பு காரணமாக கடலோரங்களில் இருந்த வீடுகள் மற்றும் மீன் வாடிகளும்  கடலுக்கு பலியாகியது.அத்துடன் கடலோரத்தில் காளியம்மன் ஆலயமும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.








No comments