Breaking News

சிலாபம் கொழும்பு பிரதான வீதியில் விபத்து

 -உடப்பு க.மகாதேவன்-

சிலாபம் - கொழும்பு பிரதான வீதியில்(மரவெல) இனிகொடவெல ரயில் கடவையில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. 


இன்று (21) காலை ஏற்பட்ட இந்த விபத்தில் சுமார் ஏழு பேர் காயமடைந்து சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். 


இனிகொடவெல ரயில் கடவை வழியாக ரயில் ஒன்று பயணித்த நிலையில் அந்த கடவை மூடப்பட்டுள்ளது. அந்த நேரத்தில், இரண்டு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், கொள்கலன் வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டிருந்த வேன் மீது மோதியது. 


பின்னர் அந்த வேன் முன்னாள் இருந்த எரிபொருள் பவுசர் மீது மோதியது. விபத்தில் வேன் பலத்த சேதமடைந்துள்ளதுடன், சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.








No comments