நாவற்காடு ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் ஆசிரியர்கள் கௌரவிப்பு.
எம்.யூ.எம். சனூன்
புத்தளம் கல்பிட்டி நாவற்காடு றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் கடந்த எட்டு வருடங்களுக்கு மேல் சேவையாற்றி தற்பொழுது இடம் மாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியர்களை கௌரவித்து நன்றி பாராட்டும் நிகழ்வு அண்மையில் (30) இடம்பெற்றது .
பாடசாலையின் அதிபர் பா.ஜெனற்ராஜ் தலைமையில் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இந்நிகழ்வுகள் இடம்பெற்றன.
பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினரின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்நிகழ்வின் கதாநாயகிகளாக திருமதி ஜீ.பீ.றொசில்டா வாஸ் ஆசிரியர், திருமதி.டி.டி.எஸ். லாலணி ஆசிரியர், திருமதி பா.நி.நிகாஸ் ஆசிரியர், திருமதி எஸ்.றோஸ் நிலாந்தி ஆகிய ஆசிரியர்களுக்கான நன்றி நவிலல் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்பிட்டி கோட்டக்கல்விப் பணிமனையின் தமிழ் மொழிப் பாட ஆசிரிய ஆலோசகர் திருமதி ஏ.என்.எம்.பி.றிஸ்மியா, ஆரம்ப பிரிவு ஆசிரிய ஆலோசகர் திருமதி ரௌபியா அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன.
No comments