குவாஸி நீதிமன்ற நீதிபதிக்கு நீதிமன்றத்தில் இடையூறு செய்தவர் பொலிசாரால் கைது
2025/05/03 அன்று அனுராதபுர மாவட்ட பெரும் பகுதி குவாஸி நீதிமன்ற நீதிபதி தனது கடமையில் வழக்கு விசாரணையில் ஈடுபட்டு கொண்டிருந்த வேலையில் இஹல அங்குநொச்சிய ஹொரவ்பொதான முஹம்மது துல்பி முஹம்மது ஹானி என்ற நபர் நீதிமன்ற நடவடிக்களுக்கு இடையூறு விளைவித்து வழக்கு விசாரணையில் ஈடுபட்டிருந்த குவாஸி நீதிபதி மற்றும் நியாய சகாயர்களுக்கு இடையூறு விளைவித்து குழப்பத்தை ஏற்படுத்தி நீதிமன்றத்தை அவமதித்து வழக்கு விசாரணைக்கு இடையூறு விளைவித்த விடயம் சம்பந்தமாக ஹொரவபொதானை பொலிஸ் பொறுப்பதிகாரி உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் 2025/05/04 கெபிதிகொள்ளாவ மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டவுள்ளார்.இதன் காரணமாக குவாஸி நீதிமன்ற நடவடிக்கைகள். வழக்கு விசாரணைகள் பாதிக்கப்பட்ட நிலை காணப்பட்டது. இது சம்பந்தமான CCTV காட்சிகள் கெபிதிகொள்ளாவ மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
No comments