இவ்வருடத்தில் 944 விபத்துக்களில் 1007 பேர் உயிரிழப்பு
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)
2025 ம் ஆண்டில் இதுவரை இடம்பெற்ற 944 விபத்துகளில் 1007 பேர் உயிரிழந்துள்ளதாக திங்கட்கிழமை (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க இதனை தெரிவித்துள்ளார்.
அதன்படி 2025 ஜனவரி 1 முதல் மே மாதம் 18 ம் திகதி வரையான காலப்பகுதியில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய 26 413 பேர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments