JobVibe.lk - Sri Lanka Job Portal

🛑காரைதீவு பிரதேச சபை: முஸ்லிம் காங்கிரஸ் பட்டியல் ஆசனத்தை சுழற்சி முறையில் இருவருக்கு வழங்கத் தீர்மானம்.!

(அஸ்லம் எஸ்.மெளலானா)

காரைதீவு பிரதேச சபையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கப் பெற்றுள்ள பட்டியல் ஆசனத்தை சுழற்சி முறையில் இருவருக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.


நடந்து முடிந்த காரைதீவு பிரதேச சபைக்கான தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாளிகைக்காடு மேற்கு வட்டாரத்தில் வெற்றியீட்டி ஓர் ஆசனத்தையும் மேலதிக பட்டியலில் ஓர் ஆசனத்தையும் பெற்றுள்ளது.


அதேவேளை மாளிகைக்காடு கிழக்கு மற்றும் மாவடிப்பள்ளி ஆகிய இரு வட்டாரங்களிலும் மு.கா வேட்பாளர்கள் சொற்ப வாக்குகளினால் தோல்வியடைந்துள்ளனர்.


இந்நிலையில் கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் முன்னிலையில் மாவடிப்பள்ளி வட்டாரத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளர் எம்.என்.எம். ரணீஸ் இணங்கிக் கொண்டதற்கு அமைவாக குறித்த பட்டியல் ஆசனத்தை எம்.என்.எம். ரணீஸ் அவர்களுக்கு முதல் இரு வருடங்களுக்கும் மாளிகைக்காடு கிழக்கு வட்டாரத்தில் போட்டியிட்டு சொற்ப வாக்குகளினால் தோல்வியடைந்த எம்.எச். நாசர் அவர்களுக்கு அடுத்த வருடங்களுக்கும் சுழற்சி முறையில் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செயலாளர் நிசாம் காரியப்பர் எம்.பி மேலும் தெரிவித்தார்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال