Breaking News

சாய்ந்தமருது அரச சேவை ஓய்வூதியர் நம்பிக்கை நிதியத்தின் வருடாந்த பொதுக் கூட்டம்.!

(அஸ்லம் எஸ். மெளலானா)

அரச சேவை ஓய்வூதியர் நம்பிக்கை நிதியத்தின் சாய்ந்தமருது பிரதேச கிளைச் சங்கத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் நேற்று சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.


சங்கத்தின் தலைவரும் கல்முனை சாஹிராக் கல்லூரியின் முன்னாள் அதிபருமான எம்.எம்.எம். இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரச சேவை ஓய்வூதியர் நம்பிக்கை நிதியத்தின் பொருளாளர் திருஞான செல்வம், சாய்ந்தமருது பிரதேச செயலக அரச சேவை ஓய்வூதியர் பிரவு பொறுப்பு உத்தியோகத்தர் ரி.சாஜிதா ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.


இதன்போது நிகழ்வின் ஓர் அங்கமாக மரணமடைந்த உறுப்பினர்களுக்கான விஷேட துஆப் பிரார்த்தனை இடம்பெற்றது. மௌலவி யூ.எல். அஹமட் இந்த துஆப் பிரார்த்தனையை மேற்கொண்டார்.


இதையடுத்து சங்கத்தின் வருடாந்த கூட்டறிக்கை, கணக்கறிக்கை மற்றும் நிர்வாக தேர்ச்சி அறிக்கை என்பன சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டதுடன் நடப்பாண்டுக்கான நிர்வாகத் தெரிவும் இடம்பெற்றது.


தலைவராக எம்.எம்.எம். இஸ்மாயில், செயலாளராக ஏ.எல். மீராலெவ்வை, பொருளாளராக வை.எல். ஹம்ஸா ஆகியோர் மீண்டும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.


அத்துடன் உப தலைவராக எம்.ஐ. ஜுஹைர், உப செயலாளராக யூ.எல்.எம். இஸ்மாயில், கணக்கு பரிசோதகராக எம். முனீர், நிர்வாகக் குழு உறுப்பினர்களாக மெளலவி யூ.எல். அஹமட், ஏ.எம்.எம். இப்றாஹிம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.


இதையடுத்து ஓய்வூதியர் நலன் சார்ந்த பிரேரணைகள், ஆலோசனைகள் மற்றும் எதிர்கால வேலைத் திட்டங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.


இதன்போது சங்கத்தின் முன்னாள் தலைவரும் ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளருமான எம்.ஐ.அப்துல் ஜப்பார், சங்கத்தின் ஸ்தாபக செயலாளரும் ஓய்வுபெற்ற அதிபருமான எம்.எம். இப்றாஹிம், கல்முனை சாஹிராக் கல்லூரியின் முன்னாள் அதிபர் ஏ. பீர் முஹம்மத் உள்ளிட்டோர் ஓய்வூதியர்களின் நலன் கருதி முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கருத்துரைத்தனர்.













No comments