Breaking News

இலங்கை நிர்வாக சேவையின் சிறப்பு தர அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார் CLG ஏ.எல்.எம்.அஸ்மி .!

இலங்கை நிர்வாக சேவையின் மூத்த SLAS அதிகாரியான ஏ.எல்.எம். அஸ்மி அவர்கள்.கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக பதவி வகித்து வரும் நிலையில் 01.01.2025ஆம் திகதி.முதல் அமுலுக்கு வரும் வகையில் நிர்வாக சேவையின் சிறப்பு தர அதிகாரியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.


இலங்கை பொதுச்சேவை ஆணைக்குழுவினால் இத்தரத்திற்கு பதவி உயர்வு வழங்கப்பட்ட அதிகாரிகளுள் ஒரேயொரு முஸ்லிம் அதிகாரி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.


பொத்துவில், அக்கரைப்பற்று உதவி பிரதேச செயலாளர், அக்கரைப்பற்று மாநகராட்சி ஆணையாளர், கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளரும், பதிவாளரும், கல்முனை மாநகராட்சி ஆணையாளர், மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர், கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (ஆளணி மற்றும் பயிற்சி) ஆகிய பதவிகளில் அவர் வினைத்திறன் மிக்க அதிகாரியாக சிறப்பாக கடமையாற்றியுள்ளார்.


ஏ.எல்.எம். அஸ்மி அவர்கள் ஒரு சிறந்த நிர்வாகி, இலங்கை நிர்வாக சேவையில் 22 வருடங்கள் கடந்து பயனிக்கும் இவர் அரச கடமையினை சட்ட விதிமுறைகளை பேணி தான் எடுத்த உறுதி மற்றும் சத்திய உரை என்பவற்றுக்கு ஏற்ப நேர்மையாக  செய்துவரும் ஒருவராவார்.


அமைச்சொன்றின் செயலாளராக நியமனம் பெற்று சேவையாற்ற வாழ்த்துகள்.


-அஸ்லம் எஸ்.மெளலானா






No comments