கற்பிட்டியில் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா கலந்து சிறப்பிக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரச்சார மேடை இன்று மாலை
(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கற்பிட்டி நகர வட்டார வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெறும் பிரச்சார மேடை இன்று செவ்வாய்க்கிழமை (29) மாலை 06 மணிக்கு கற்பிட்டியில் முஸ்லிம் காங்கிரஸின் கற்பிட்டி அமைப்பாளரும் உயர்பீட உறுப்பினருமான எம் எச் எம் ஹில்மி தலைமையில் இடம்பெற உள்ளது.
இப் பிரச்சார மேடையின் பிரதான பேச்சாளராக கட்சியின் உப தலைவர் கலாநிதி ஹிஸ்புல்லா கலந்து சிறப்பிக்க உள்ளதுடன் மேலும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், புத்தளம் மாவட்ட பேச்சாளர்கள் ஆகியோருடன் முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் நியாஸ்,உயர்பீட உறுப்பினர் ஏ.எச்.எம் பைரூஸ் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments