சிலாபம் - முன்னேஸ்வரத்தில் இடம்பெற்ற புதுவருட நிகழ்வு
(உடப்பு - க.மகாதேவன்)
பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான வரலாற்று சிறப்பு வாய்ந்த சிலாபம் முன்னேஸ்வரம் ஶ்ரீ வடிவாம்பிகா சமேத ஶ்ரீ முன்னைநாதஷ்வாமி ஆலயத்தின் “விசுவாவசு” சித்திரை வருடப்பிறப்பு (14) மிகவும் பக்த பூர்வமாக கொண்டாடப்பட்டது.
இதன் போது, புது வருட பஞ்சாங்கம் படிக்கப்பட்டதுடன்,பக்தர்கள் பக்தி பூர்வமாக அதிகாலையில் வந்து பூஜைகளில் கலந்து கொண்டனர். பூஜை முடிவில் பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டு,இனிப்பும் வழங்கப்பட்டது
No comments