Breaking News

புத்தளம் இளங்கலை பட்டதாரிகளின் அமைப்பின் கிரிக்கெட் போட்டி

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

புத்தளம் இளங்கலை பட்டதாரிகளின் அமைப்பின் (UGAP)  ஏற்பாட்டில் உள்ளக கிரிக்கெட் போட்டி தொடர் செவ்வாய்க்கிழமை (15)  R4  புட்செல் உள்ளக விளையாட்டரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது. 


ஆட்டங்களின் நேர்மையான நடத்தை மற்றும் துல்லியமான முடிவுகளுக்காக அமாத் மற்றும் பைசான் ஆகியோர் நடுவர்களாக பணியாற்றினர்.


இந்நிகழ்வின் அதிதிகளாக ஏசியன் புட்போல் பெட்ரேசன் பீ தர அனுமதிபெற்ற  பயிற்றுவிப்பாளரும்  புத்தளம் திறந்த பல்கலைக்கழகம் பிரதிப் பணிப்பாளர்  திரு ஜிப்ரி, பாடசாலைகளின் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் என். அம்லக் மற்றும் கற்பிட்டி , வணாத்தவில்லு பிரதேச சபைகளுக்கான விளையாட்டு அதிகாரி டி.எச்.ஏ சகீ அஹமட் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்


போட்டியின் இறுதியில் றோயல் சேலஞ்சர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற, யங் ஹிட்டர்ஸ் அணி இரண்டாம் இடம் பெற்றது.


சிறந்த பந்துவீச்சாளர் விருதை நிஷ்கான் மற்றும் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருதை முஸர்ரப் ஆகியோர் வென்றனர்.


இந்த விழா, விளையாட்டு பரிமாற்றம் மட்டுமின்றி ஒற்றுமையையும் உறவுகளைப் பெரிதும் வலுப்படுத்திய நிகழ்வாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.







No comments