சித்திரை புதுவருடத்தை முன்னிட்டு உடப்பு ஆலயத்தில் விஷேட பூஜை
(உடப்பு - க.மகாதேவன்)
மலர்ந்த சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு உடப்பு ஶ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஶ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் திரௌபதியம்மன் ஆலயத்தின் (14) திங்கட்கிழமை விஷேட பூஜைகள் நடைபெற்றது.
ஆலயத்தில் அபிஷேகம், இடம்பெற்றதோடு பக்தர்களினால் அர்ச்சனைத் தட்டுகள் வழங்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. அத்துடன் ஆலயக்குருக்கள் சிவஶ்ரீ குமார பஞ்சாட்சர சிவாச்சாரியார் அவர்களினால் புதுவருட பஞ்சாங்கம் படிக்கப்பட்டது. பின்னர் பிரசாதம் வழங்கப்பட்டது. இதன் போது பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments