Breaking News

புத்தளத்தில் மாபெரும் தேர்தல்பிரச்சார பொதுக்கூட்டம் : கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் பங்கேற்பு..!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் புத்தளம் மாநகர சபையில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் புத்தளம் மாநகர சபையின் முதன்மை வேட்பாளரும், மு. கா. உயர்பீட உறுப்பினருமான ரணீஸ் பதுர்தீன் தலைமையில் புத்தளத்தில் இன்று (11) இடம்பெற்றது. 


இந்நிகழ்வின் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.


இதன்போது, கட்சியின் உயர்பீட உறுப்பினர்களான   ஏ.என்.எம். ஜௌபர் மரைக்கார், கே.எம். ரிழ்வான், பஸீர், மு.கா புத்தளம் மாநகர சபை வேட்பாளர்கள், கட்சி முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துசிறப்பித்தனர்.
















No comments