சிலாபம் - காக்கப்பள்ளியில் பேரூந்து விபத்து!.
(உடப்பு-க.மகாதேவன்)
சிலாபத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியாருக்குச் சொந்தமான பேரூந்து ஒன்று காக்காப்பள்ளிய பிரதேசத்தில் விபத்துக்குள்ளான சம்பவம் (12) சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
மேற்படி சம்பவத்தில்,சாரதியின் அதிக வேகம் காரணமாக பேரூந்து அருகிலுள்ள மதிலுடன் மோதுண்டு, மரத்துடனும் மோதியுள்ளது. அத்துடன் பாதை அருகிலுள்ள கட்டடம் ஒன்றுடனும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன் போது,பேரூந்தில் பயணம் செய்த பலர் காயம் ஏற்பட்ட நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments