Breaking News

புத்தளம் ஹாமித் அகடமி மாணவர்கள் பலஸ்தீன தூதரகத்தைப் பார்வையிட்டனர்.

புத்தளம் ஹாமித் அகடமி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் சேர்ந்து, கடந்த 23.04.2025 ம் திகதி கொழும்பிலுள்ள பலஸ்தீன தூதரகத்தை பார்வையிட்டனர். 


இந்நிகழ்வின் போது, காஸா மக்களுக்காக ரூ.300,000 நன்கொடை தூதரகத்திற்கு வழங்கப்பட்டது.


மேலும் ஹாமித் அகடமியின் அதிபர் அஷ்ஷைக் எம்.எச்.எம். இஹ்ஸான் (நவவி) அவர்களின் மூலம், இந்த சந்திப்பின் நினைவாக தூதுவர் அவர்களுக்கு நினைவுச் சின்னம் ஒன்று வழங்கிவைக்கப்பட்டது. 


இந்நிகழ்வு மாணவர்களுக்கு சமூகப் பொறுப்பை உணர்த்தும் முக்கிய அனுபவமாக அமைந்ததாக அதிபர் தெரிவித்தார்.













No comments