JobVibe.lk - Sri Lanka Job Portal

மன்னார் சிலாவத்துறையை பிறப்பிடமாகவும், ரத்மல்யாயவை வசிப்படமாகவும் கொண்ட ஓய்வுபெற்ற நெய்னா முகம்மது சரூர் ஆசிரியர் காலமானார்.

மன்னார் சிலாவத்துறையை பிறப்பிடமாகவும் புத்தளம் நகரம் மற்றும் ரத்மல்யாயவை வசிப்படமாகவும் கொண்ட  ஓய்வுபெற்ற நெய்னா முகம்மது சரூர் ஆசிரியர் காலமானார். 


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். 


இவர் மன்னார் அல் அஸ்ஹர் தேசிய பாடசாலை, புத்தளம் பாத்திமா மற்றும்  புத்தளம் வேப்பமடு முஸ்லிம் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் முன்னாள் ஆசிரியரும், ஓய்வு பெற்ற மர்ஹூம் நெய்னா முகம்மது மரைக்கார் அதிபர்  அவர்களின் அன்பு மகனும், மர்ஹூம் PT செய்னுலாப்தீன் யாஸ்மின் அவர்களின் அன்புக் கணவரும், ஈஈஈீஈஅஅஅஅசமீர்(UK) நிப்ராஸ்(UK) ரிபாசா(ஆசிரியை) நிப்லா (UK)மற்றும் ஷெறீன்(UK) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.


அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று இரவு (2024.04.25) தில்லையடி ரத்மல்யாயவில் அமைந்துள்ள YMMA மையவாடியில் 8.30 மணியளவில் நடைபெறும்.


இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தந்தைக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு  பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.


اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار


தகவல் :-

ரிபாஸா ஆசிரியை (மகள்)




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال