மதுரங்குளி வர்த்தக சங்கத்தின் தற்காலிக பாதை முன்னெடுப்புக்கு நன்றி தெரிவிப்பு!.
மதுரங்குளி தொடுவா வீதியில் அமைந்திருக்கும் இரண்டு பாலங்களும் ஒல்லாந்தர் காலத்தில் கட்டப்பட்டு அது பழுதடைந்த நிலையில் அதை புனர்நிர்மாணம் செய்வதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில் கடையாமோட்டைக்கும் மதுரங்குளிக்குமான தொடர்பு சின்னப்பாலம் (கடையாமோட்டை பாடசாலைக்கு அருகாமையில்) புனர்நிர்மாணம் காரணமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
இப்பாலம் துண்டிக்கப்பட்டதன் காரணமாக குறிப்பாக கடையாமோட்டை பாடசாலையில் கல்வி கற்கக்கூடிய மாணவர்களில் 300 மாணவர்கள் புத்தளம் தொடக்கம் சிலாபம் வரையான மாணவர்கள் இப்பாலத்தின் ஊடாகவே பாடசாலைக்கு நாளாந்தம் வந்து செல்கின்றார்கள்.
இந்தப் பாலத்தின் உடைவு ஏற்பட்டதன் காரணமாக இவர்கள் பாடசாலைக்கு உரிய நேரத்திற்கு வருவதற்கோ அல்லது மேலதிக வகுப்புகளுக்கோ பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றார்கள். அது மாத்திரமல்லாமல் எதிர்வரும் 17 ஆம் திகதி க. பொ. த. (சா/த) பரீட்சைக்கு இப்படசாலை ஒரு மத்திய நிலையமாகக் காணப்படுவதால் இந்த மத்திய நிலையத்தில் விருதோடை, கனமூலை, கடையாமோட்டை ஆகிய பாடசாலை மாணவர்கள் இப்பாடசாலையில் பரீட்சைக்கு தோற்ற வருகை தரவுள்ளனர்.
எனவே இந்த நேரத்தில் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படக் கூடாது என்று ஒரு உயரிய சிந்தனையில் இதற்கு ஒரு தற்காலிக பாதை (By Road) போடுவதற்கு, மக்கள் பிரதிநிகள், உயர்மட்ட அதிகாரிகள் முயற்சித்த போது அது இரண்டு கோடி ரூபா செலவு என மதிப்பிடப்பட்டு கைநழுவிப் போன ஒரு விடயத்தினை சுமார் ஐம்பது இலட்சம் ரூபாவுக்கு ஒரு வாரத்தில் செய்து முடித்ததை ஒரு சாணக்கியமான தலைவர் என்பதை நிரூபித்திருக்கின்றார். அந்த தலைவருக்கு உறுதுணையாக நின்ற உறுப்பினர்கள், அனுசரணை வழங்கிய வர்த்தகர்கள், மதுரங்குளி வர்த்தக சங்கம் குறிப்பாக அதன் தலைவர் எம்.எஸ்.டீ. அமான் உட்பட அதன் உறுப்பினர்கள் அனைவருக்கும் கடையாமோட்டை அதிபர், ஆசிரியர்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
நன்றி.
ஏ. எச். பெசுல் ஆசிரியர் பு/கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)
No comments