Breaking News

புத்தளம் மாநகர சபைக்கு கட்டுப்பணம் செலுத்திய ஐக்கிய தேசிய முன்னணி

(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் புத்தளம் மாநகர சபைக்கு ஐக்கிய தேசிய முன்னணியின்  சார்பில் தராசு சின்னத்தில் ஜவுபர் மரைக்கார் தலைமையில் கட்டுப்பணம் புத்தளம் மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள உதவி தேர்தல்கள் ஆணையாளர் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (14) செலுத்தப்பட்டது.


உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக புத்தளம் மாநகர சபைக்கான கட்டுப்பணம் மாத்திரமே ஐக்கிய தேசிய முன்னணியினால் செலுத்தப்பட்டுள்ளதாகவும், புத்தளம் பிரதேச சபைக்கான கட்டுப்பணம் விரைவில் செலுத்தப்படும் எனவும் ஜவுபர் மரைக்கார் தெரிவித்துள்ளார்.


இதன்போது ஜவுபர் மரைக்கார், நஸ்ஹத் மரைக்கார் மற்றும் ஆசிரியர் பாரூக் பதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.




No comments