Breaking News

சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் இப்தார் நிகழ்வும் புதிய நிர்வாகிகள் அறிமுகமும்

 (எம்.எஸ்.எம்.ஸாகிர்)

சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் புதிய நம்பிக்கையாளர் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வும் புதிய நிர்வாகிகள் அறிமுகமும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.


சாய்ந்தமருது - மாளிகைக்காடு புதிய நம்பிக்கையாளர் சபையின் தலைவர் டாக்டர் எம்.எச். சனூஸ் காரியப்பர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட கரையோர பகுதிகளுக்கான அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.


இதன்போது சாய்ந்தமருது - மாளிகைக்காடு நம்பிக்கையாளர் சபையின் செயலாளர் பொறியியலாளர் எம்.எம்.எம். முனாஸ், பொருளாளர் ஏ.எல்.எம்.முஸ்தபா, பிரதித் தலைவர் எம்.எஸ்.எம். முபாரக்,  உபதலைவரும் ஜம்இய்யத்துல் உலமா சபை சாய்ந்தமருது - மாளிகைக்காடு கிளையின் தலைவருமான மௌலவி அஷ்ஷேக் எம்.எம்.எம்.சலீம், உப செயலாளர்களான ஏஷர் மீீராசாஹிப், அபூபக்கர் பர்ஹாம், உப  பொருளாளர் எம்.ஐ. நஜீம் உட்பட புதிய, பழைய நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், சாய்ந்தமருது மஹல்லாப் பள்ளிவாசல் தலைவர், செயலாளர், பொருளாளர், மௌலவிமார், கல்விமான்கள்,  ஜமாஅத்தினர், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.


மிகவும் சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்வில், சாய்ந்தமருது - மாளிகைக்காடு பள்ளிவாசலில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட 40  நம்பிக்கையாளர்களும் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர்.


நிகழ்வில் கிராஅத் பள்ளிவாசலின் பேஸ் இமாம் எஸ். அப்துல் லத்தீப் ஓதியதோடு, ரமழான் பற்றிய சிறப்புரையை பள்ளிவாசலின் பேஸ் இமாம் எம்.ஐ .ஆதம்பாவா (ரஷாதி) நிகழ்த்தியதும் குறிப்பிடத்தக்கது.














No comments