Breaking News

கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து பத்துலு ஓயா பகுதியில் விபத்து

 (உடப்பு -க.மகாதேவன்)

நிக்கவெரட்டிய பகுதியிலிருந்து அதிகாலை கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று, ஆராச்சிகட்டுவ, பத்துலுஓயா பாலத்துக்கு அருகாமையிலுள்ள பகுதியில் வீதியை விட்டு விலகி, மரமொன்றில் மோதி, பின்னர் கடை மற்றும் வீட்டொன்றின் மீது மோதி விபத்துள்குள்ளாகியுள்ளது.


பேரூந்தின் உதிரிப் பாகமான துன்னை பகுதி உடைந்ததன் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளதோடு. இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (17) காலை இடம்பெற்றுள்ளது. 


விபத்தில் பேருந்தில் இருந்த பயணிகள் மற்றும் வீட்டில் இருந்த ஒரு சிறு குழந்தை உட்பட 21 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


காயமடைந்தவர்கள் சிலாபம் மற்றும் முந்தல் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆராச்சிகட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








No comments