புத்தளம் - கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம் பெற்ற இப்தார் நிகழ்வு
(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)
புத்தளம் - தெற்கு கோட்டத்துக்குட்பட்ட கனமூலை முஸ்லிம் மகா வித்யாலயத்தில் இப்தார் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (16) பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் பாடசாலையில் புதிதாக அமையப் பெற்றிருக்கும் மர்ஹும் அஷ்ஷெய்க் அரூஸ் (கபூரி) ஞாபகார்த்த கேட்போர் கூட மண்டபத்தில் பாடசாலையின் அதிபர் பீ.எம். முஸ்னி தலைமையில் இடம்பெற்றது
இந்நிகழ்வில் பாடசாலையின் ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்துடன் இப்தாருக்கான பூரண அனுசரணையை ஹுதா லங்கா வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments