Breaking News

சாய்ந்தமருது கமு/கமு/ அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை (ஜீ.எம்.எம்.எஸ்) வருடாந்த இப்தார் வைபகம்

நூருல் ஹுதா உமர், நிப்ராஸ் லத்தீப் 

கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/ அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை (ஜீ.எம்.எம்.எஸ்) பாடசாலையின் வருடாந்த இப்தார் வைபகம் பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். இல்யாஸ் தலைமையில் பாடசாலை கேட்போர் கூடத்தில் இன்று (07) நடைபெற்றது.


இந்நிகழ்வின் விசேட மார்க்க சொற்பொழிவை சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் பேஷ்இமாம் எம்.ஐ.எம். ஆதம்பாவா (ரஸாதி) நிகழ்த்தினார்.


மேலும் இந்நிகழ்வில் ஓய்வு பெற்ற கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம். நிஷாம், கல்முனை கல்வி வலய பிரதி கல்வி பணிப்பாளர் யூ.எல்.எம். சாஜித், சாய்ந்தமருது கோட்டக்கல்வி பணிப்பாளர் திருமதி அஸ்மா அப்துல் மலீக், சாய்ந்தமருது பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல்களின் தலைமை நிர்வாகிகள், ஆசிரிய ஆலோசகர்கள், கல்முனை கல்வி வலய அதிகாரிகள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவினர், பாடசாலை பழைய மாணவர்கள், பாடசாலை முகாமைத்துவ குழுவினர், பாடசாலை ஆசிரிய, ஆசிரியைகள், பிரதேச பிரமுகர்கள், கல்விமான்கள் என பலரும் கலந்து கொண்டனர்.















No comments