உடப்பு முத்துப்பந்திய கிராமத்தில் ஆயிரக்கணக்கான பாரை மீன்கள் பிடிப்பு
(உடப்பு - க.மகாதேவன்)
உடப்பை அண்மித்த முத்துப்பந்திய கிராமத்தில் வெள்ளிக்கிழமை பகல் (7) தனியார் கரைவலைக்குச் சொந்தமான ஒருவரின் கரைவலையில் ஆயிரக்கணக்கான வெண்பாரை மீன்கள் பிடிக்கப்பட்டு கரை சேர்க்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மீனும் சுமார் 5கிலோ தொடக்கம் 8 கிலோ வரை நிறை கொண்டதாகக் காணப்பட்டது. பிடிக்கப்பட்ட மீன்கள் எல்லாம் உடப்பு பகுதியிலுள்ள கரைவலை மீன் வாடிகளுக்கு விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட நிலையில், கொழும்பு சந்தைக்கும் அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments